தேவதாசி என்பவர்கள் பெரும் கோயில்களில் நடனமாடுவதற்காக சிறுவயதில் நேர்ந்து விடப்படும் பெண்களைக் குறிக்கும் சொல். இச்சொல் தேவன் (இறைவன்) + தாசி (அடிமை) = இறைவனின் அடிமை என்ற பொருள்படும். இவ்வழக்கம் 1930களுக்கு முன்பு வழமையாக இருந்தது. இந்த முறை கோயில் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டதாக இருந்தாலும், பின்னாட்களில் இவர்கள் கோயில்களை நிர்வாகித்த மேல் வர்க்கத்தினருக்கு அல்லது அரசர், செல்வந்தர் போன்றவர்கள் முன்பு நடனமாட வைக்கப்பட்டதுடன் அவர்களுடைய பாலியல் இச்சைகளுக்கு அடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக இவ்வழக்கத்துக்கு 1920 முதல் இந்தியாவில் பாரிய எதிர்ப்பு இருந்தது, அதன் காரணமாக 1947 ஆண்டில் தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஒழுக்கம், கற்பு என்னும் கருத்துக்களில் ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்ற ஒரு தலைப்பட்ட நீதி வழக்கிலிருப்பதை வெளிப்படையாகக் காட்டும் நிறுவனமே தேவதாசி முறையாகும். இது ஆண்களின் வசதிக்காகவும், அவர்களின் இச்சையை அவர்கள் விருப்பப்படி பூர்த்தி செய்யவும், பெண்கள் சமூகத்தை மூளைச்சலவை செய்து ஏற்படுத்தப்பட்ட ஒரு கொடிய திட்டமாகும். பொட்டுக் கட்டுதல் என்ற பெயரில் பெண்களின் பலகீணமான பொருளாதார நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட அநீதியாகும்.
இம்முறையின்படி சமூகத்தில் சில பெண்கள் கடவுளுக்குச் சேவை செய்வதற்காக தானம் செய்யப்பட்டனர். அவர்கள் தம் வாழ்க்கையில் விலை மகளிராகத் தொழில் புரிந்தனர். மதத்தின் பெயரால் அப்பெண்கள் பலியாடாக ஆக்கப்பட்டனர். ஆடல் பாடலுக் கென்றும், பூசைகள் செய்ய ஒத்தாசைக்கென்றும், கடவுளுக்குச் சேவை செய்ய என்றும் அப்பெண்கள் கோவில்களுக்குத் தானம் செய்யப் பட்டனர். குடும்பத்தில் இடர்பாடு வரும்போது அது நீங்குவதற்காகவும், குழந்தை பிறக்காத குடும்பத்தில் குழந்தை பிறந்தால் நேர்திக் கடன் என்றும், ஆண் வாரிசுகள் இல்லாத குடும்பங்களில் வருமானத்திற்காகவும், பிற பொருளாதார சிக்கல்களுக்காகவும் பெண்கள் அவ்வூர் கோவில் தெய்வங்கள் பெயரில் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டனர். இன்னும் சில குடும்பங் களில் முதல் குழந்தை பெண் என்றால் அது கோவிலுக்கே என்று, உயில்கள் முலமாக சாசனம் செய்திருந்தனர். அக்கோவிலின் கடவுளை மணந்து கொண்டு, பூசைக்காலங்கள், திருவிழாக்கள் முதலிய சமயங்களில் இறைவனை ஆடல் பாடல்களால் மகிழ்வித்து வாழ்க்கை நடத்தினர். நடை முறையில் அவர்கள் அக்கோவில் பூசாரிகள், அவ்வூர் தனவந்தர்கள், மற்றும் பலருக்கும் இன்பமளிக்கும் விலைமாதர்களாவே வாழ்க்கையை நடத்தினர். பெண்ணைப் பெற்றவர்களோ மறைமுகமாக அச்செல்வந்தர்களிடம் இருந்து பொன், பொருள் நிலபுலன்களைப் பெற்றுக் கொண்டனர்.
அதனால் தேவதாசிகள் கடவுளைக் கணவனாக வாய்க்கப் பெற்றவர்களாதலால் அவர்கள் வாழ்வில் ஒருபோதும் கைம்மை நிலையை அடைய மாட்டார்கள். அதனால் இப்பெண்கள் ஒரு சில இடங்களில் உயர்வாகவும், கற்புநெறி தவறியதற்காக இப்பெண்டிர் சில இடங்களில் இழிவாகவும் கருதப்பட்டனர். இவ்வாறு அவர்கள் வாழ்க்கை சில முரண்பட்ட கூறுகளை கொண்டு விளங்கியது. தேவாரடியாள் என்ற வார்த்தை மூலம் தெய்வத்திற்கு அடிமையானவள் என்று கருதப்பட்டவள், பின்னாளில் தேவடியாள் என்று அவர்கள் இழிநிலையைக் குறிப்பதற்காகவும் அந்த வார்த்தை மாறியது.
தேவதாசி முறையை ஒழிப்பது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது காங்கிரசின் முதுபெரும் தலைவர் ‘தீரர்’ சத்தியமூர்த்தி, “தேவதாசி முறையை ஒழித்தால் இந்திய கலாச்சாரமே கெட்டுவிடும்” என்று கொதித்தார்.
அப்போது, அந்த அவையில் இருந்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, “தேவதாசி முறையிலிருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம். இந்திய கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்காக, இனி உங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்கட்டும்” என்றார்.
இதனால் சர்வமும் ஒடுங்கிப்போனார் சத்தியமூர்த்தி. டாக்டர் முத்துலெட்சுமியை இவ்வாறு அதிரடியாக பேசும்படி ஆலோசனை வழங்கியவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்தான். இதன் பின்னர், 1929ல் தேவதாசி ஒழிப்பு முறை மசோதா கொண்டுவரப்பட்டது. சட்டமாக 1947 வரை காத்திருக்க வேண்டியிருந்தது.